திருவள்ளூர், மார்ச். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த புதுப்பட்டு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் இன்று மதியம் வழக்கமாக வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் அமரும் இடத்திற்கு மேல் பகுதியில் உள்ள மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது.

அப்போது அங்கு அமர்ந்திருந்த காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன வளர்புரம் பகுதியை சேர்ந்த ஜோஸ்பின், வயலூர் கிராமத்தை சேர்ந்த பார்வதி,  மப்பேடு கேகே நகர் பகுதியை சேர்ந்த மணி ஆகியோர் மீது விழுந்த தில் அவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினார்கள்.

மேலும் அதில் அவர்களுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது உடனடியாக அவர்களை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் முதியோர் உதவித்தொகை எடுக்க வந்ததாக வங்கி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாடிக்கையாளர்கள் அதிகமாக வரும் நேரத்தில் நடைப்பெற்ற அச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவி பின்பு இயல்பு நிலைக்கு திரும்பியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here