PIC: File Copy
திருவண்ணாமலை, செப்.4-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லாடவரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டி.கே.லட்சுமிநரசிம்மன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார வசதி மாணவர்களுக்கு செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது ஆணையாளர் ஏ.எஸ்.லட்சுமி, ஒன்றிய உதவி பொறியாளர் நிர்மல்ராஜ், பணிமேற்பார்வையாளர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.




















