திருவள்ளூர், செப் . 04

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயகுமார் மற்றும் போலீசார் மணவாளநகர் மற்றும் வெங்கத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ் வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 240 கிராம் கொண்ட 30 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (24), பிரபு (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.மேலும் கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைப் போன்று, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப் பேட்டையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்து பொழுது சென்னையை நோக்கி வந்த இரு சக்கர வாகனத்தை  நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ஒன்றரை கிலோ எடை கொண்ட 30 கஞ்சா பொட்டலங்கள் கடத்தபட்டது தெரியவந்தது.  

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னை காவாங்கரையை சேர்ந்த ரமேஷ் (35) என்ற வாலிபரை கைது செய்து கஞ்சா கடத்திய இரு சக்கர வாகனம் மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here