திருவாரூர், மே. 10 –
தமிழகத்திற்கு தேவை தேசிய மாடலா ? அல்லது திராவிட மாடலா ? என்ற விவாத நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்துக் கொண்டார். அப்போது அவர் தெரிவித்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட திமுகவினர் கிருஷ்ணசாமியை அச்சுறுத்தும் வகையில் கூச்சலிட்டதாகக் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று புதிய தமிழகம் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் ரயில் நிலையம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் திமுக அரசைக் கண்டித்தும், டாக்டர் கிருஷ்ணசாமியை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திமுகவிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பேட்டி:குணா – கொள்கை பரப்பு செயலாளர்





















