கும்பகோணம், ஜூலை. 10 –

கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் நேற்று அன்னை பல்துறை தொழில்நுட்ப கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

அன்னை கல்வி குழு தலைவர் அன்வர் கபீர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அப்துல் கஃபூர் முன்னிலை வகிக்க, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக இயக்குனர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி கலந்துக் கொண்டு 900 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பட்டயங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாணாக்கர்களிடையே அவர் பேசுகையில் வளரும் தலைமுறையினர் உலகம் முழுவதும் சாதனை செய்ய கல்வி மட்டுமே காரணமாக திகழ்கிறது. இக் கால தொழில்நுட்பம், கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான படிப்புகளையும், வசதிகளை செய்து தருகின்றன.

பட்டம் பெறுவோருக்கும், இளைஞர்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள். பட்டயங்கள் பெற்ற அனைவரும் நம்பிக்கையுடன் திகழ வேண்டும். ஏராளமான வாய்ப்புகள் உங்கள் முன் உள்ளன. உங்கள் முயற்சிகளில் கிடைக்கும் தோல்விதான், உங்களின் வெற்றிக்கு பலமாக அமையும். ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்’ என்ற திருக்குறளுக்கு ஏற்ப வெற்றி பெறுவீர்கள். என்று தெரிவித்தார்.

தொடர்ந்து 900க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டயங்களை வழங்கி வாழ்த்தினார். இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் சபாநாயகம், தேர்வு அலுவலர் சாமிநாதன், துணை முதல்வர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி கௌதம் மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here