திருவள்ளூர், பிப். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், இணையவழி மூலமாக ஏற்படும் குற்றங்கள் மற்றும் அதனை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருவள்ளூரில் நடைப்பெற்றது. மேலும் பேரணியை திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி.மீனாட்சி மற்றும் ஏ.எஸ்.பி விவேகானந்த சுக்லா ஆகியோர் கொடியசைத்து அவ் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர்.
மேலும் அப்பேரணி திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே தொடங்கிய அவ்விழிப்புணர்வு பேரணியில் இணையவழி மூலம் ஏற்படும் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வுகளை வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
மேலும் அதில் இணையவழி மூலம் வேலை என்ற பெயரில் டெலிகிராம், யூடியூப், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத் தளங்களில் முதலீடு, ரேட்டிங், ரிவ்யூ போன்றவற்றை செய்தால் ரூ.100 ரூ.300 தருவதாகவும், உங்கள் வங்கிக் கணக்கில் அதிகம் பணம் இருப்பதாக டிஜிட்டல் மணி ஆக காண்பித்து நம்ப வைத்து பணம் பறிக்கும் முயற்சி செய்வதை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும், மேலும் மொபைல் போனில் தேவையற்ற லோன் ஆப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும்,
மேலும் அதுப்போன்று பதிவிறக்கம் செய்யப்படும் ஆப்புகளால் உங்கள் மொபைலில் உள்ள தொடர்புகள், கேலரி விவரங்கள், திருடப்பட்டு, அதனை மூலம் உங்களிடம் பணம் கேட்டு மிரட்டும் குற்றச்செயலில் மர்ம நபர்கள் ஈடுபடுவார்கள் என அப்பேரணியின் மூலம் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார்கள்.
மேலும் பணம் கடன் தருவதாகவோ, வேலை தருவதாகவோ கூறி அனுப்பும் குறுந்தகவல்களையோ, லிங்க்கையும் தொட வேண்டாம். எனவும் அப்படி அதனை தொடுவதன் மூலம் உங்கள் வங்கி விவரங்கள் திருடப்பட்டு உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணங்கள் திருட வாய்ப்புள்ளதை அறிவுறுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கியும், அவ் விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவள்ளூர் நகராட்சியை வந்தடைந்தது.
அப் பேரணியில் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், ரவிக்குமார், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் அதில் கலந்து கொண்டனர்.






















