பெரும்பேடு, பிப். 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் தலைமை ஆசிரியர் மைதிலி தலைமையில் நடைப்பெற்றது. மேலும் உதவி தலைமை ஆசிரியர் சுமதி, திமுக ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், ஊராட்சி மன்ற தலைவர் இளஞ்செல்வி பார்த்திபன், உள்ளிட்டவர்கள் அவ்விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.

முக்கியத்துவம் பெற்ற இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் வருகை தந்து மாணவர்களிடையே பல்வேறுக் கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பதினோராம் வகுப்பு கல்வி பயிலும் 41 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை துரை சந்திர சேகர் வழங்கினார்.

மேலும் அச்சிறப்பு மிகு விழாவில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ்  துணை தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் வெங்கட்டகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் ஆசிரியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்று அவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here