இராசிபுரம், ஜூலை. 23 –
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தொட்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி, 56. பஞ்சாயத்து டேங்க் ஆப்ரேட்டராக உள்ளார். இவரின் வீடு அருகே பெரியசாமி மற்றும் பழனிவேல் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 70 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது.
சின்னசாமிக்கு கடந்த ஆறு மாதமாக பார்வை குறைபாடு இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தவர், அப்போது கால் தடுமாறி கிணற்றில் விழுந்து விட்டார்.
உறவினர் எங்கு தேடியும் சின்னசாமி கிடைக்காத நிலையில், இன்று கிணறு அருகே சென்று பார்த்த போது சின்னசாமி கிணற்றில் சடலமாக கிடப்பது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.