இராசிபுரம், ஜூலை. 23 –

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (35) டிரைவராக பணிப்புரிந்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 4 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மேலும் மோகன்ராஜ், சசிகலா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால், மனக்கவலையில் இருந்த மோகன்ராஜ் மதுக்கு அடிமையாகிவிட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் வேலைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டுச் சென்றவர், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள இடிகாட்டில் உள்ள மரத்தில் சேலையை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here