திருவண்ணாமலை செப். 23 –
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.06.2021 வரை உள்ள காலி இடங்களுக்காக 09.10.2021 அன்று தற்செயல் தேர்தல் நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்படி நடைபெறவுள்ள தற்செயல் தேர்தல்கள் நடைபெறுவதை கண்காணித்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பார்வையாளராக.அ.ஞானசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் உள்ள பொது மக்கள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனுமிருப்பின் 9445001100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்.பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.