திருவாரூர், மே. 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்கள் கே.நாகராஜ் ..

கருகும் பயிர்களை காப்பாற்ற 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க கோரியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடையின்றி மின்சாரம் வழங்க கோரியும் திருவாரூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து இயற்கை பேரிடர்களும் நீர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டு இழப்பை சந்தித்து வருகின்றனர்.கடந்த சம்பா பருவத்தில் மழையின்மை மேட்டூர் நீர் கிடைக்க பெறாதது போன்ற காரணங்களால் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் கோடை பயிர் சாகுபடி செய்தாவது இழப்பை ஈடு செய்யலாம் என விவசாயிகள் நம்பியிருந்த நிலையில் மின்வாரியத்தின் மூலம் மும்முனை மின்சாரம் வழங்குவதில் சுணக்கம் காட்டியதன் விளைவாக கோடை பயிர் கருகும் நிலையில் உள்ளது.

பருத்தி, எள், நெல் முதலிய அனைத்து வகையிலான பயிர்களுமே தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் நிலையில் உள்ளது. இந்நிலையில் விவசாயிகளை காப்பாற்ற மின்வாரியம் மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்கினால் மட்டுமே காப்பாற்ற முடியும் எனவே தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க கோரியும். அதே போன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடையின்றி மின்சாரம் வழங்க கோரியும் திருவாரூர் தலைமை மின்வாரிய கோட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு . தமிழக விவசாயிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆர்ப்பாட்டம் சங்கத் தலைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது. மேலும்  இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்

 

பேட்டி:சேதுராமன் –  தலைவர் தமிழக விவசாயிகள் நல சங்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here