தஞ்சாவூர், ஏப். 27 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

அழிந்து வரும் கலைகளை பாதுகாக்க வேண்டும். கலைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி தஞ்சையில் மாணவிகள், குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட சுற்றுலா வளர்ச்சி வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி  குழுமம் சார்பில் தஞ்சை அருங்காட்சியகத்தில் கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.

ஒரு நாள் பயிற்சியாக புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கம். தலையாட்டி பொம்மை உற்பத்தி செய்யும் கலைஞர்கள் கொண்டு வழங்கப்பட்டது.

தஞ்சை அருங்காட்சியகத்திற்கு சுற்றுலா வந்தவர்களுக்கு தஞ்சை தலையாட்டி பொம்மையின் பெருமை குறித்து எடுத்து கூறி மாவு பிசைதல், அச்சில் வார்த்தல், வண்ணம் தீட்டுதல் ஆகிய செயல் விளக்கபயிற்சி அளிக்கப்பட்டது.

கலைப்பொருட்கள் செய்யும் கலைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவர்களை மீட்டுருவாக்கம் செய்து கலைகளுக்கு நல் ஆதரவு பெருக வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சி வழங்கப்பட்டது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.

கோடை விடுமுறைக்காக கோவையில் இருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்து இருக்கேன். வீட்ல டிவி பார்த்து, வீடியோ கேம் விளையாடிக்கிட்டு இருந்த எனக்கு தலையாட்டி பொம்மை செய்ய வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷம். நிறை கற்றுக் கொண்டதாக கோவையை சேர்ந்த பள்ளி மாணவி ஆம்பல் தெரிவித்தார்.

Byte முத்துக்குமார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். ஆம்பல். செய்முறை பயிற்சி கற்றுக் கொண்டவர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here