தொண்டி . செப் 8 :

இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கடந்த சில வருடங்களாக இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை தொடர்ந்து இயற்றி வருகின்றது. அதில் ஒன்று தான் குடியுரிமை திருந்த சட்டம் . இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்கள். இதையடுத்து நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது இச்சட்டத்திற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

 

தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா கூறியது, திமுக ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பட வேண்டும் என தமுமுக மற்றும் அனைத்து இஸ்லாமியர் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இது தேர்தல் அறிக்கையாகவும் வந்தது. நேற்று தமிழக முதல்வர் குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்க்கு அனைத்து இஸ்லாமியர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here