ராமநாதபுரம், செப் . 08 –

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி மேலவலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னு சிறையெடுத்த அய்யனார் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு பெருவிழா இன்று 08.09. 2021 புதன்கிழமை பகல் 1.00 மணி அளவில் அய்யனார் கோவில் முன்பாக உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் 46 காளை மாடுகள் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக கொடிக்குளம், பால்கரை, பாரனூர், தாயமங்கலம், ஆப்பனூர், சீனாங்குடி, பொட்டகவயல், தூவல் போன்ற பகுதியில் உள்ள மாடுகள் பங்குபெற்றன.

மேலவலசை கிராமத் தலைவர் செல்வராஜ் கூறும் போது: எங்கள் கிராமத்தில் சுமார் 261 ஆம் ஆண்டாக நாங்கள் இந்த எருதுகட்டு திருவிழாவினை சீரும் சிறப்போடும் தேவேந்திர குல வேளாளர் மக்களாகிய நாங்கள் நடத்தி வருகிறோம் என்றார். மேலும் நாங்கள் பல தலைமுறைகளாகவும் இந்த ராமநாதபுரம் மாவட்டதில் சிறந்த எருதுகட்டு பெருவிழாவாக திகழக்கூடியது எங்கள் கிராமத்தில் நடைபெறக் கூடியது என்றும் சுற்றுவட்டார கிராமமே அறிந்த ஒன்று. உடன் கிராம துணைத்தலைவர் செல்வக்குமார், பொருளாளர் மக்கள சாமி, செயலாளர் லட்சுமணன், எழுத்தாளர்  கதிரேசன் மற்றும் அய்யனார் கோவில் நிருவாகி கிழவன் போன்ற கிராம முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here