திருவாரூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது… தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள நெற்பயிர்களை அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தாமதமாக பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து போகும் நிலையில் உள்ளது..
திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் வேண்டி விவசாயிகள் போராட்டம் நடத்திய பிறகு.. தற்பொழுது வெண்ணாறு மற்றும் வெட்டாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது..
ஆனால்… திறந்து விடப்பட்ட தண்ணீர் திருவாரூர் பகுதியில் காய்ந்த நிலையில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் வழங்கவில்லை.. என்றும், இதுகுறித்து விவசாயிகள் திருவாரூர் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு… ‘ நாகப்பட்டினம் மாவட்ட பகுதிக்குத்தான் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது…’இந்த பகுதிக்கு தண்ணீர் கிடையாது… என கூறுவதாக விவசாயிகள் சொல்கின்றனர்..
இதுகுறித்து தமிழக விவசாயி நல சங்க பொதுச் செயலாளர் ராமமூர்த்தி சொல்லும் போது….. ‘ இந்த பகுதியில் கிட்டத்தட்ட 400 ஏக்கர் அளவிற்கு பயிர் காய்ந்த நிலையில் உள்ளது.. பாரபட்சம் பார்க்காமல் அதிகாரிகள் இந்த பகுதிக்கும் தண்ணீர் வழங்கிட வேண்டும்..’ என கோரிக்கை வைத்தார்..
பேட்டி: ராமமூர்த்தி,
தமிழக விவசாயிகள் நல சங்கம்.





















