செய்தி சேகரிப்பு இசிஆர் பா.வினோத் கண்ணன்
முன்னாள் அதிமுக அவைத் தலைவரும், அரசவை கவிஞருமான புலமைப்பித்தன் இன்று காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இசிஆரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ மலர் அஞ்சலி செலுத்தினார்,
சென்னை, செப் . 8 –
முன்னாள் அதிமுக அவைத்தலைவர் புலமைப்பித்தனுக்கு வயது 86 அவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்தனர், அவர்கள் இருவரும் இறந்த நிலையில், பேரன் திலிபன் மற்றும் மனைவி தமிழரசியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரலில் ஏற்பட்ட சளி தொற்று காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு டயாலிசிஸ் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு இன்று காலை காலமானார்.
அவரது உடல் கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்கேனியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9:30 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இன்று காலை அவரின் மரணச் செய்திக் கேட்டு அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்த வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் வை.கோ அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவருடனான தனக்கு இருந்த நட்பு மற்றும் அவர் தன் மீது காட்டிய அளவிட முடியாத அன்பு விடுதலை புலி இயக்கத்தின் கொள்கை மீதான பிடிப்பு அதன் தலைவர் பிரபாகரனுடன் அவருக்கு இருந்த உறவு என அவர், அவருடனான இருந்த நட்பை ஆரம்ப காலம் தொட்டு இருந்து பழகி வந்த பல நினைவுகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.
மேலும், அவரின் இழப்பு செய்தி தனக்கு பேரிடையை தருவதாக இருக்கிறது. என தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
மேலும் அவருக்கு உடல் நிலை சரியில்லாத போது அவரை பலமுறை மருத்துவரிடம் கொண்டு சென்றிருக்கிறேன். எனது மதுவிற்கு எதிரான நடைபயணத்திற்கு பாட்டு எழுதியுள்ளார்.
நான்கு முறை சிறந்த பாடலாசிரியராக தேர்வாகி விருது பெற்றுள்ளார். தொல்காப்பியர் முதல் பாரதிதாசன் வரை அனைவரது படைப்புகளையும் ஆராய்ந்தவர். தமிழ் ஈழத்தின் மீது தீராத காதல் கொண்டவர். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை தனது தம்பியாக பாவித்தவர். பிரபாகரன் இவரது வீட்டில் தங்கியிருந்தார் .அதிமுக வில் இருந்த போது தமிழர் ஈழத்திற்காக பேசியவர், விடுதலை புலிகளின் போர்ப்படை தளபதிகள் இவரது வீட்டினை தனது வீடாக பாவித்தனர். அவரது மரணம் , தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்திற்கு, தமிழ் ஈழத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு என் மீது அளவற்ற பாசம் கொண்டவர் கொங்கு மண்டலத்தில் பிறந்த இவர், நூற்பாலையில் பணிபுரிந்தவர். பின்பு எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு பல வெற்றிகரமான பாடல்களை எழுதியுள்ளார் . தமிழை நேசித்தார், உயிராக கருதினார் அவரது குடும்பத்திற்கு மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் தமிழ் ஆர்வாலர்கள் என பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் புலமைப்பித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர். தற்போது, முன்னாள் அமைச்சார் ஜெயக்குமார், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் சினேகன், சி.ஆர்.சரஸ்வதி , மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் வந்து மாலை அனிவித்து அஞ்சலி செலுத்தினார்.