சென்னை, பிப். 26 –

தம்பட்டம் செய்திகளுக்காக து.ராஜகுமார் …

சென்னை, உலகத் தாய்மொழி வாத்தினை முன்னிட்டு கடந்த பிப். 22 ஆம் தேதியன்று நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தமிழ் தாய்மொழியின் சிறப்பு மற்றும் அதன் வரலாறுக் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது.

மேலும் அந்நிகழ்ச்சியினை தமிழகப் பெண்கள் செயற்களம், தமிழரண் மாணவர்கள் அமைப்புகள் இணைந்து ஏற்பாடுகளை வெகுச்சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் அக்கருத்தரங்கம் அக்கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் அரங்கில் கல்லூரி முதல்வர் டாக்டர் சி ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை ஏற்று தமிழ் மொழியின் சிறப்புகளையும் முன்னோடி தமிழ் அறிஞர்களின் பெருமைகளையும் விரிவாக விளக்கி எளியமுறையில் எடுத்துரைத்தார். மேலும் அப்போது அவர் நமது தாய்மொழியின் சிறப்பைக் காத்து அதனை பல்வேறு பரிணாம வளர்ச்சிக்கு உலகம் மேலும் போற்றிடும் வகையில் நம் மாணவர்கள் எடுத்துச் செல்லவேண்டுமெனவும் மேலும் அது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள தலையாய கடமை என்று அறிவுறுத்தினார். வரவேற்புரையை முனைவர் த.புகழேந்தி வழங்கினார்.

மேலும் அச்சிறப்புமிகு விழாவில் தாய்மொழி நாள் வரலாறு மற்றும் தமிழ் மொழிக்கென்று இருக்கும் தனிச்சிறப்பு உள்ளிட்ட அனைத்து விதமான தமிழ் மொழிக் குறித்த கூறுகளை ம.ந.யாழினி மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழரண். மாணவர்கள் வழங்கினார்.

அவ்வுரையில் அவர் நினைவுக்கூர்ந்த பங்களாதேஷ் டாக்கா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கிய தாய்மொழி நாள் வரலாறு குறித்து விவரித்தார் அவ்வாறாகவே மொழி காப்பதற்காக தமிழ்நாட்டில் நீண்ட நெடிய போராட்டம் நடைபெற்றுள்ளதையும் தனது உரையில் தெரிவித்தார்.

வாழ்த்துரையை பேராசிரியர் நா சேஷாத்திரி முனைவர் கா ஜெயபாலன் ஆகியோர் வழங்கினர் மாணவர்கள் தமிழ் மொழியின் ஆற்றலை நன்கு உணர்ந்து மாணவர்கள் வளர வேண்டும் என்பதை அப்போது அனைவரும் வலியுறுத்தினர்.

திருவாளர் இ இசைமொழி பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்ற வரலாற்றின் தொடர்ச்சியில் வரக்கூடியவர் ஒருங்கிணைப்பாளர் தமிழகப் பெண்கள் செயற்களம் அவர் தனது உரையில் தமிழ் மொழியினை எந்தளவுக்கு பயன்பாட்டு களத்தில் வைத்துள்ளோமோ அந்த அளவுக்குத் தான் மொழி வளரும் எனவே தினசரி பயன்பாட்டில் தமிழை நன்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

விழாவின் நிறைவில் தாய்மொழி நாள் உறுதி ஏற்பினை இர.கதிரன் வழங்கினார். வே. உதயகுமார் தமிழ் மொழியை வளர்த்திடும் முழக்கங்களை வழங்கினார். நன்றி உரையை முனைவர் சூ ரவிச்சந்திரன் வழங்கினார் நிகழ்வு முழுவதையும் பு.யோகேஷ் எம். வி. ரெய்னா உள்ளிட்ட மாணவர்கள் தொகுத்து வழங்கினர். அச்சிறப்புமிகு விழாவில் திரளான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விழாவினை மேலும் சிறப்பித்தனர்.

இளந்திரையன் கரிகாலன் உள்ளிட்ட இன்னும் பலர் தமிழரசன் சார்பில் வந்திருந்த இளைஞர்கள் நிகழ்வை நன்கு ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர்.

தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவருக்கும் மிகச் சிறப்பாக பொன்னாடை  அணிவித்து மலர் தூவி ஆசிரியர்களைப் போற்றினர் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்புமித்தனர். அவ்வாறாகவே நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழக பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் அமைப்பினருக்கும் கல்லூரி சார்பில் தமிழ் துறை சார்பில் பேராசிரியர்கள் சிறப்பு செய்தனர்.

இப்படி தினத்தில் மட்டுமல்ல தாய் மொழியை ஒவ்வொரு நாளும் போற்ற வேண்டும் என்ற உணர்வை இந்த நிகழ்வு நன்கு எடுத்துக்காட்டியது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here