கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று சிறப்பு கூட்டுதிருப்பலி நடைபெற்றது.
கும்பகோணம், ஜன. 1 –
கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் 2022 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரும் ஒன்றுகூடி இச்சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
திருப்பலியில் கடந்த ஆண்டு நடந்த கொரோனா தொற்று முக்கிய நிகழ்வுகளை 2 நிமிடம் ஒளிபரப்பு செய்து கடந்த ஆண்டிற்கு நன்றி தெரிவித்தும், 2022 ஆண்டு புத்தாண்டை வரவேற்றும், கொரோனா பெரும் தொற்று வரக்கூடிய ஓமிக்காரன் நோய்களிலிருந்து விடுபடவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இந்த பிரார்த்தனையில் சிறுவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இதுபோல் சுற்று வட்டாரத்தில் உள்ள தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது.





















