தமிழ்நாட்டில் தரமான மருத்துவ மனைகள் திறமை மிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவம் சார்ந்த மாணக்கார்களை உருவாக்குவதில் சர்வ தேச தரத்தை இலக்காக கொண்டு செயல் பட வேண்டும் என்று சென்னையில் நேற்று ரேலா மருத்துவ மனையில் தழும்பில்லா ரோபோடிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையத்தை திறந்து வைத்து இவ்வாறு முதலமைச்சர் உரையாற்றினார்.
சென்னை,ஜூலை 30 –
சென்னையில் உள்ள ரேலா மருத்துவ மனையில் தழும்பில்லா ரோபோட்டிக் கல்லீரல் தான அறுவை சிகிச்சை மையத்தை திறந்து வைத்து முதல்வர் பேசும் போது ஏற்கனவே இந்த மருத்துவனையை 2018 ஆம் ஆண்டு நான்தான் திறந்துவைத்தேன். அது தற்போது நவீன மருத்துவ தொழில் நுட்ப கருவிகள் மற்றும் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளையும் உள்ளடக்கி பிரமாண்டமாக வளர்ந்து நிற்ப்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அப்போதே இந்த மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் முகமது ரேலா அவர்களை நன்கு அறிவேன். அவர் உலகப் புகழ் பெற்றவர் தன்னுடைய மருத்துத் திறமையால் 4500 க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்றுச் சிகிச்சை செய்திருக்கக் கூடியவர் மேலும் பிறந்து 5 நாளே ஆன குழந்தைக்கு அவர் செய்த சிகிச்சைக்காக கின்னஸ் சாதனையாளராக போற்றக்கூடியநிலைக்கு வந்திருக்க கூடியவர் எந்த வயதினராக இருந்தாலும்,எவ்வளவு மிக கடுமையான உடல் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும், அவர்களுக்கு சிகிச்சை அளித்து உயிர் காக்க கூடிய வல்லவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். இத்தகைய திறமைசாலிக்காக ஒரு மருத்துவமனையை உருவாக்கி அதற்கு அவர் பெயரையே வைத்துக் கொடுத்த ஜெகத்ரட்சகன் அவர்களுடைய பெருந்தன்மை உள்ளபடியே பாராட்டுக்குறியது. அவருக்கு எனது பாராட்டுக்கள் என்று குறிப்பிட்டார்.
மேலும் தற்காலத்தில் புதிது புதிதாக பல்வேறு நோய்கள் வருகின்றன. அவைகளை பல நேரங்களில் மருத்துவர்களாலேயே கண்டுப்பிடிக்க முடியாத நோய்களாக இருந்து விடுகின்றன. ஆதலால் ரேலா மருத்துவமனை போன்ற உலகத்தரம் வாய்ந்த மருத்துவ பிரிவுகளை கொண்ட மருத்துவ மையங்கள் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்த கொரோனா காலக்கட்டத்தில் மருத்துத்துறையினர் செய்த சேவைகளை நம்மால் நிச்சயம் மறக்க முடியாது தங்கள் உயிரையே பணையம் வைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், தொண்டாடற்றிக் கொண்டுயிருக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் நான் இந்த நேரத்திலே இதயப்பூர்வான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதனால் அரசின் ஊரடங்கு தளர்வு காலங்களில் பொதுமக்கள் கூட்டம் சேர்வதை தவிர்த்திட வேண்டும் . சமூக இடைவெளிகளையும் முகக்கவசம் அணிவதை தவிர்க்காமல் நடந்துக் கொள்ள வேண்டும்.
மேலும் எதிர் வரும் காலத்தில் தமிழ்நாட்டில் சர்வதேச அளவிலான தரத்தை மருத்துவத்துறையில் அடைந்திட இலக்காக கொண்டு செயல்படுவதை தமிழக அரசின் கொள்கை முடிவு அதனை ஏற்கனவே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். அதையேதான் இங்கும் கூறுகிறேன் சர்வதேச தரத்திலான மருத்துவ சேவையை மக்களுக்கு அளித்திட ஒண்றிணைந்து பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ரேலா மருத்துவமனை தலைவர் டாக்டர் முகமது ரேலா, ஜே.ஆர். சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் ஜெ.ஸ்ரீநிஷா, சாடளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மற்றும் ரேலா மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.