சென்னை, ஜூலை 30.2021 –
இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136 வது, பிறந்த நாள் தினம் இன்று இந்நாளில் அவரை நினைவுக்கூர்ந்து அவரின் செயலைப்போற்றும் வகையில் அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பின்வருமாறு செய்தி ஒன்றை பதிவிட்டுவுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி வருமாறு பிற்போக்குத்தனங்களும், பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136 வது பிறந்தநாள் இன்று, இந்நாளில் பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம் என்று அவர் பற்றிய தனது கருத்தினை இவ்வாறு சமூக வலைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.