திருவள்ளூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 1450 மாணவர்கள் ஒன்றாக இணைந்து தரையில் டாக்டர். அம்பேத்கர் உருவம் மற்றும் I vote for sure என்ற வாசகம் இரண்டையும் மிக நேர்த்தியாக உருவாக்கினர். இதில் சிறப்பு விருந்தினராக பொன்னேரியின் சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் கலந்துக்கொணடார். பொன்னேரி தாசில்தார் மதிவாணன், கல்லூரி தாளாளர் பச்சையப்பன், செயலர் ரமேஷ், நர்சிங் கல்லூரி தாளாளர் ரமா, முதல்வர் டாக்டர் தாமோதரன், துணை முதல்வர் மரிய லியோனி பமிளா, பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சாராட்சியர் மற்றும் மாணவர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் 100% வாக்களிப்போம் என்று கூறி பதாகையில் வாக்காளர் உறுதி மொழியை கையெழுத்திட்டு உறுதிப்படுத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






















