சுவாமிமலை, செப் . 30 –

கோயில்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்கள் தரிசனத்திற்கு விதித்துள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சத்தியநாராயணன் என்பவரின் தலைமையிலான முருகபக்தர்கள் சுவாமிமலை திருக்கோயில் முன் தமிழக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கண்டன ஆர்பாட்டம் செய்தனர்.

மதுபான கடைகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை திறக்கப்பட்டிருக்கும் போது கொரோனாவை காரணம் காட்டி, தமிழக அரசு, திருக்கோயில்களை மட்டும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது மக்கள் தரிசன அனுமதியை ரத்து செய்திருப்பது நியாயமில்லை என்றும்,  இதனால் கோயிலை நம்பியுள்ள சுமார் பலவிதமான தொழில்கள் பாதிக்கப்படுவதாக கூறி,  ஏராளமான முருகப்பக்தர்கள் திரண்டு, அறுபடைவீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முன்பு, இன்று கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு, வார இறுதி நாட்களான, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், பொது மக்கள் தரிசன அனுமதியை ரத்து செய்து இருப்பது கண்டனத்திற்குரியது,  கோயில்களில் தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக, பூ மாலைகள் கட்டுவோர், அர்ச்சனை தட்டுக்கள் விற்பனை செய்வோர், ஆட்டோ, கார் போன்ற சுற்றுலா வாகன தொழில், உணவகங்கள், தங்கும்விடுதிகள் என பலவிதமான தொழில்களும் இன்று கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளது எனவே தமிழக அரசு, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து நாட்களிலும் கோயில்களில் பொது மக்கள் தரிசன அனுமதி வழக்க வேண்டி, ஏராளமான முருகபக்தர்கள், கும்பகோணம் அருகேயுள்ள நான்காம் படைவீடான சுவாமிமலை, சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முன்பு திரண்டு, கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here