நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் மற்ற எல்லா செயல்களும் சிறப்பாக நடக்கும் என்று முதலமைச்சர் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைப்பெற்ற துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் உரையாற்றும் போது கூறினார்.
சென்னை, ஜூலை 30 –
தமிழ்நாடு அரசு பணியாளர் மூலம் தேர்ச்சிப்பெற்று 86 புதிய துணைக் கண்காணிப்பளர்கள் பயிற்சி முடித்த நிலையில், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைப்பெற்ற துணைக் கண்காணிப்பாளர்கள் நிறைவு அணி வகுப்பு விழா நேற்று ஜூலை 29 நடைப்பெற்றது அதில் கலந்துக்கொண்ட முதலமைச்சர் அவர்கள் மத்தியில் உரையாற்றினர்.
அதற்கு முன்பு அவர்கள் அளித்த அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.
அரசாங்கத்தில் இருக்கும் எத்தனையோ துறைகள் போல காவல் துறையும் ஒரு துறைதான் என்று நீங்கள் நினைத்து விட வேண்டாம். ஒரு அரசிடமிருந்து மக்கள் முதலில் எதிர் பார்ப்பது அமைதியைத்தான். அந்த அமைதி ஏற்படுத்தித் தர வேண்டிய பெரும் பொறுப்பு காவல்துறைக்குத் தான் உண்டு எந்த ஒரு நாட்டிலும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்து விட்டால், பொதுமக்கள் பாதுகாப்பான சூழலை உணர்ந்து விட்டால் அந்த நாட்டில் மற்ற செயல்களை சரியாக செய்யலாம். மேலும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும் முதலீடுகள் பெருகும் அச்சமற்று மக்கள் தங்களது உழைப்பைச் செலுத்துவார்கள்.
இத்துறை குற்றங்களுக்குத் தண்டனை வாங்கித் தரும் துறையாக இல்லாமல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கின்ற துறையாக காவல் துறை மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, அந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கிறது என்றார்.
மேலும் ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாகத்துக்கு இன்று நான் அடிக்கல் நாட்டிவுள்ளேன். இன்றைக்கு இது மிக மிக முக்கியமான தேவையாக உள்ளது. கொலை ஆதாயக்கொலை, கொள்ளை வழிப்பறி திருட்டு பாலியல் வன்முறைகள் ஆகியவைதான் மிகப்பெரிய குற்றங்களாக அடையாளம் காணப்பட்டன. ஆனால், இவை அனைத்தையும் விஞ்சியதாக சைபர் குற்றங்கள் பெருகிவிட்டன. தொழில் நுட்பம் வளர வளர அதனைக் குற்றம் செய்பவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இன்று இணைய வசதிகளை பயன்படுத்தி அடையாளமற்ற முகம் தெரியா குற்றவாளிகள் பெருகிவிட்டனர். இதனால் இணையவழிப் பொருளாதார குற்றங்கள் பெருகி விட்டன. அதனைப்போல் தொழில் நுட்ப சேவைகளை திருடுவது, தகல்வல்களை அழிப்பது, முகம் தெரியாதவர்களை ஏமாற்றுவது, இணைய தளங்கள் மூலமாக மிரட்டுவது, போலிக் கணக்குகள், போலிப் பெயர்கள் ஆகியவைப் பெருகி வருகின்றன. இந்த இணையதளங்கள் மூலமாக பாலியல் குற்றங்களும், நிதிக் குற்றங்களும், குற்றவாளிகளால் அதிகமாக பயன் படுத்துகிறார்கள். அதனை கண்டுப்பிடித்து தடுப்தற்கான நவீன வழிமுறைகள் நமக்கு வந்தாக வேண்டும் என்றார்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் சைபர் குற்றங்களை தடுப்பதற்கான மிக நவீன வழி முறைகளைப் பின் பற்றி வருகின்றன. அத்தகைய நவீன வழி முறைகள் நாம் முழுமையாக அறிய வேண்டும்.
2030 க்குள் சைபர் குற்றங்கள் நடக்க்காத நாடாக மாற்றிக் காட்ட போகிறோம் என்று ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளது. அந்நாடுகள் எத்தகைய தொழில் நுட்பத்தை உருவாக்கப் போகிறார்கள் என்பதைத் தமிழ்நாடு காவல்துறை தெரிந்துக் கொள்ள வேண்டும் அதற்கு நமது காவல் துறை நவீனமயமாக வேண்டும். என்றார் காவல்துறையை நவீனமயமாக்கியதில் திமுக அரசுக்கு மிக முக்கியமான பங்கு உண்டென்றார். 1971 ஆம் ஆண்டு காவல்துறையில் கம்யூட்டர் பிரிவு தொடங்கப் பட்டது. காவல்துறையில் கம்யூட்டர் மயமாக்குதல் தொடங்கிய முதல் மாநிலம் என்ற பெருமையைத் தாமிழ்நாடுதான் பெற்றது. தீவிவாதிகளை ஒடுக்க சிறப்புப் பிரிவு தொடங்கப் பட்டது. தமிழ்நாட்டில் முதன் முதலாக பெண் காவலர்களை நியமித்தவர் கலைஞர் அவர்கள் பெண் துணை ஆய்வாளர்களையும் நியமித்தார். போலீஸ் பயிற்சிப் பள்ளியைத் திறந்து வைத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர்தான், காவல்துறையை நவீனப் படுத்துவதற்காக 1969 ஆம் ஆண்டு ஆர்.ஏ.கோபால்சாமி தலைமையில் போலீஸ் கமிசன் அமைத்ததும், முன்னாள் தலைமைச் செயலாளர் தலைமையில் 1989 ஆம் ஆண்டு போலீஸ் ஆணையம் அமைத்ததும் கலைஞர்தான் 2006 ல் பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ் தலைமையில் மூன்றாம் போலீஸ் கமிஷன் அமைத்ததும் அவர்தான். இன்றைக்கு வீர தீர செயல்கள் புரியும் காவலர்களுக்கு அண்ணா விருது வழங்குவதை தொடங்கி வைத்ததும் அவர்தான் என்றார்.
எனவே உங்கள் உணர்வுகள் தேவைகள் அனைத்தையும் நன்றாக உணர்ந்தே இருக்கிறோம் காவல் துறையை சேர்ந்தவர்களது விருப்பங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றித் தருவோம் என்ற உறுதி மொழியை இந்நேரத்தில் உங்களுக்கு அளிக்கிறேன் என்றார்
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பணியில் சேர்ந்து கடமையாற்ற இருக்கும் துணைக் கண்காணிப்பாளர் பயிற்சி முடித்த அனைவருக்கும் வாழ்த்துக்களைக்கூறி பகிர்ந்துக் கொண்டார்.
இவ் விழாவில் முன்னதாக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ.சைலந்திர பாபு வரவேற்புரை வழங்கினார். உள் மதுவிலக்கு மற்றும் ஆய்வுத் தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே பிரபாகர் விளக்கவுரை வழங்கினார்.
பின்பு உள்ளரங்கு, வெளியரங்கு மற்றும் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிகளில் சிறந்து விளங்கி பயிற்சி துணைக் கண்காணிப் பாளர்களுக்குப் பதக்கங்களையும் ஓட்டு மொத்த பயிற்சியில் சிறந்து விளங்கிய பயிற்சி துணைக் கண் காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி. சிறப்பு வாளையும் வழங்கினார். மேலும் 10.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப் படவுள்ள ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாக கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். விழாவின் நிறைவாக தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் முனைவர் பிரதீப் வி.பிலீப் நன்றியுரை ஆற்றினார்.