மீஞ்சூர், மார்ச். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிமனை திறப்பு விழா நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் நகர திமுகச் செயலாளர் காசு தமிழ் உதயன் தலைமை வகித்தார். பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத் தலைவர் அலெக்சாண்டர், இளைஞர் அணி நகர செயலாளர் மில்லர் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை சந்திரசேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ. கோவிந்தராஜன், மாவட்ட அவை தலைவர் மு. பகலவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்து டாக்டர் கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் அவ்விழாவில் திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மையம், மனிதநேயக் கட்சி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.























