கும்பகோணம், செப். 17 –
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை கலைந்திட வேண்டும். எனற தீர்மானம் உட்பட பல்வேறு தீர்மானங்களை இக்கூட்டத்தில் நிறைவேற்றினார்கள்.
திருவிடைமருதூர் தாலுக்காவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு உள்ள தோழர் நாகசந்திரன் நினைவுக் கொடிக்கம்பத்தில் அச்சங்கத்தின் மாநில பொதுச்சயலாளர் மயில் சங்க கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தலைவர் வேணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் வட்டார செயலாளர் காளிதாசன் மாவட்ட தலைவர் கலைச்செல்வன் மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் மாநில செயலாளர் வீரமணி மாவட்ட செயலாளர் மதியழகன் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணதாசன் பொதுக்குழு உறுப்பினர் சரவணன் ஒரத்தநாடு கல்வி மாவட்ட தலைவர் ராஜசேகர் செந்தில்குமார் சுதாகரன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இப்பொதுக்குழு கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மயில் பேசுகையில் தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்
தேர்தல் வாக்குறுதி படி 116 ஆவது வரியில் இடம்பெற்றிருக்கும் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை கலைந்திட உறுதியளித்தபடி முரண்பாடுகளை உடன் நிவர்த்தி செய்திட வேண்டும்
ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடிய உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பறிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் திரும்ப உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை அமுல்படுத்தி வழங்கிட வேண்டும்.
மத்திய அரசு அகவிலைப்படி அறிவிக்கும் போதெல்லாம் தமிழக அரசு அதே தேதியில் அகவிலைப்படி வழங்க வேண்டும்.
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு இணைய வழி பணி என்பது கிராமங்களில் வசிக்கும் ஆசிரியர்களுக்கு இணைய வசதி இல்லாமல் இருப்பதால் தேவையற்ற இணையவழி மற்றும் பதிவு செய்தல் உத்தரவை பள்ளிக்கல்வித்துறை திரும்பப் பெற வேண்டும்.
தற்போது காலாண்டு தேர்வு முடிந்தவுடன் பள்ளிவிடுப்பு நேரத்தில் ஆசிரியர்களுக்கு மட்டும் எண்ணும் எழுத்தும் என்கின்ற பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி விடுப்பு காலத்தில் இது போன்ற பயிற்சிகள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





















