திருவாரூர், ஏப். 29 –

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடியில் மாரியம்மன் கோவில் தீமிதிமிதி திருவிழா நடைபெற்றது. அதில் நேர்த்திக்கடன் செலுத்த தீயில் இறங்கிய ஒருவரும் பூசாரியும் தீ குண்டத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

 

இந்த  விழாவில் சக்தி கரகம் எடுத்து வந்த பூசாரியும் அதனைத் தொடர்ந்து வந்த பக்தர் ஒருவரும் தீக்குழியில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இந்த இரண்டு பேரையும் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். அவர்களில் நன்னிலம் நல்லமாங்குடியை சேர்ந்த ஒருவர் ரமேஷ் வயது 38 மற்றொருவர் சக்தி விநாயகம் வயது 22 இருவரையும் உடனடியாக அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here