தஞ்சாவூரில், மே. 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தஞ்சாவூரில் தரைக்கடை வியாபாரிகள் குடைக்கு பதிலாக தற்போது போர்வையை கட்டிக் கொண்டு அதனுள் இருந்தப் படியே வியாபாரத்தை செய்து வருகின்றனர்.

இருதினங்களுக்கு முன்பு தொடங்கிய கத்திரி வெயில் தாக்கத்தால் தஞ்சாவூரில் காலை முதலே வெப்ப அதிகரித்து வருகிறது.. கோடை வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தற்போது 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக 102 டிகிரி பதிவாகி வருகிறது. அதனால் .பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் சாலையோர வியாபாரிகளோ கத்திரி வெயிலால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் சாலையோர வியாபாரிகள் குடைகளுக்கு பதிலாக போர்வைகளை கட்டி கத்திரி வெயிலில் இருந்து  தரைக்கடை வியாபாரிகள் தங்களை பாதுகாத்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here