திருவள்ளூர், ஜூன். 26 –

சென்னை – கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்னை அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக குற்றம் தெரிவித்து இன்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

மேலும் இப்பிரச்சினைக் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் எதிர் வரும் ஜூலை 1-ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அப்போது அச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் ஏற்கனவே யு டர்ன் இருந்த நிலையில், தற்போது அதனை அடைத்து விட்டு சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டாய வசூலில் ஈடுபடுவதாகவும், அதற்கு காவல் துறை உடந்தையாக இருப்பதாகவும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டினார்கள். மேலும் அச்செயலைக் கண்டிக்கும் வகையில் அவர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது, சென்னை – கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இச்சுங்கச்சாவடியில் போதிய வசதிகள் இல்லை எனவும், மேலும் சுங்கச்சாவடிக்கு லாரி உரிமையாளர்கள் எதிரானவர்கள் இல்லை எனவும், சுங்கச்சாவடி காலாவதியாகி விட்டதாகவும், சுங்கச்சாவடிகளில் முறைக்கேடுகள் நடைப்பெறுவதாகவும், அவ்வார்வாட்டத்தின் போது அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

தொடர்ந்து அவ்வார்ப்பாட்டத்தில் உரை நிகழ்த்திய தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ், 55 சதவீத விபத்துக்கள் சுங்கச்சாவடி சாலைகளில் தான் நடக்கிறது எனவும், பஞ்சாப் மாநிலத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அரசு எடுத்து வருவது போல், தமிழக முதல்வரும் அதே போல காலாவதியான சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 60 கி.மீ.-க்குள் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் எனக்கூறி 3 மாதங்களில் எடுப்போம் எனக்கூறி 10 மாதங்களாகியும் இதுவரை எடுக்கவில்லை எனவும், மோடி ஆட்சிக்கு வரும் போது சுங்கச்சாவடியே இருக்காது எனக்கூறிய நிலையில் இதுவரையில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும், வரும் 1-ஆம் தேதி வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here