கும்பகோணம், அக். 9 –

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட ஒன்றிய குழு 24வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வந்ததால்  விறு விறுப்பான  வாக்குப்பதிவு இங்கு நடைப் பெற்றது .

கும்பகோணம் ஒன்றியக் குழு 24வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துறையூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் திமுக வேட்பாளர் சசிகுமார் வாக்குப் பதிவு செய்தார். மருதாநல்லூரில் நடக்கமுடியாத மூதாதையர் சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு வாக்களிக்கும் மையத்திற்கு அழைத்துச் சென்று வாக்களித்தனர். முதியோர் பலர் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 24 வது வார்டு உறுப்பினர் இடைத் தேர்தலில் இன்று 5400 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் சசிகுமாரும், அதிமுக சார்பில் சீதாராமனும்,  அமமுக சார்பில் விஜய் ஆனந்தும் ,நாம் தமிழர் கட்சி சார்பில் ராம்ஜி என்பவரும் போட்டியிடுகின்றனர் மக்கள் காலை முதல் ஆர்வமாக வந்து வாக்களித்து செல்கின்றனர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here