கும்பகோணம், செப். 17 –

இன்று உலகம் முழுக்க சாதியின் பெயரால் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விற்காக தன் வாழ் நாளெள்ளாம் அவர்களுக்காக பாடுப்பட்டு வாழ்ந்து மறைந்த ஈரோடு சிங்கம் ஈ.வே.ரா எனும் பெரியார் அவர்களின் 144 வது பிறந்த நாள் விழாவினை நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மற்றும் தமிழ்நாடு அரசும் போற்றிக்கொண்டாடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கும்பகோணத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், தமிழக அரசின் ஆணைக்கிணங்க அன்னாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கடந்த ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு  மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன் மண்டல செயலாளர் விவேகானந்தன் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் தமிழனி ஆகியோர் தலைமையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ் மாவட்ட செய்தி தொடர்பாளர்  முருகதாஸ் தொகுதி செயலாளர் தமிழன் ஒன்றிய செயலாளர் விடுதலைச் செல்வன் நகர செயலாளர் கலையரசன் நகர பொருளாளர் வீரமுத்து இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட பொறுப்பாளர் சத்தியசீலன் ஒளியவன் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர்கள் நெப்போலியன் நந்திவனம் பாலா மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here