காஞ்சிபுரம், ஜூலை. 01 –
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றியுள்ளார்.
மேலும், நேற்றுடன் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நாராயணன் நேற்று பணியிட மாறுதல் காரணமாக ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் ஆறு மாதம் சம்பளம் பாக்கி உள்ளது அந்த சம்பளத்தை உடனே வழங்க கோரி மண்ணெண்ணெய் கேனுடன் வந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் பெருமாள் தீ குளிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்த பத்திரிக்கையாளர்கள் தடுத்து நிறுத்தி பெருமாளை காப்பாற்றினர். இதனை தொடர்து ஆறு மாதம் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பெருமாள் புறப்பட்டு சென்றார். மேலும், நகராட்சி நிர்வாக இயக்குநர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக்கு வந்த நிலையில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் தீ குளிக்க முயன்ற இச் சம்பவம் அவ்வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















