செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவரும், தங்களுக்கு அரசு மருத்துவ மனையில் முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று குற்றம் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு, செப் . 5 –
செங்கல்பட்டு நேதாஜிநகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது 62) இவரது மனைவி மன்னம்மாள் (வயது 58) இருவரும் கடந்த 31-ஆம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டடு கடந்த 1 ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் சரியான சிகிச்சை தங்களுக்கு அளிக்கப் படவில்லை என்றும் மேலும், அதற்கான முறையான பதிலும் வழங்கவில்லை, மருத்துவர்களோ செவிலியர்களோ அலட்சியமாக பதிளிப்பதால் மன உளச்சலுக்கு ஆளாகி எங்களது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்ற நிலையில் தற்போது உள்ளோம்.
எங்களை போன்ற ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கத்தான் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. அப்படி இருந்தும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம் சாட்டிய கொரோனா நோயாளிகள் மன்னம்மாள் அவரது கணவர் வெங்கடேசன் இருவரும் தங்களுக்கு நியாயம் கேட்டு செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம் எனக் கூறினர். இத் தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி அவர்களின் கோரிக்கை படி எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.