தமிழ்நாடு தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைப்பெறவுள்ள சாதராணத் தேர்தலுக்காக பெறப்பட்ட வேட்பு மனுக்களின் விவங்களை வெளியிட்டுவுள்ளது. அதில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளது.

சென்னை, செப் . 26 –

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த செப். 13- 2021 ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.

அதன்படி அறிவிக்கப்பட்ட 27, 003 பதவியிடங்களில் நீதிமன்ற வழக்கின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள 27, 002 பதவியிடங்களுக்கு 88,151 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 1,166 வேட்பு மனுக்கள் உரிய பரிசீலனைக்குப் பின் நிராகரிக்கப் பட்டன. 14, 571 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் திரும்ப பெற்றுக் கொண்டனர். 2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. 2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக 23,998 பதவியிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

138 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இறுதியாக களத்தில் உள்ளவர்கள் 827 பேர்

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான இடங்கள் 140 இதில் 2 இரண்டு இடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதம் உள்ள 138 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு மொத்தம் 1125 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் 44 மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிரகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 252 வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். இறுதியாக 138 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக 827 பேர் களத்தில் உள்ளனர்.

1376 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 6064 பேர் களம் காண்கிறார்கள்

1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான இடங்களில் 5 இடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.மீதமுள்ள 1376 பதவியிடங்களுக்கு 8663 வேட்பு மனுக்கள் பெறப்பட்டதில் 231 வேட்பாளர்களின் மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2363 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர். இறுதியாக 1376 பதவிகளுக்கு களத்தில் 6064 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

2779 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டிக்களத்தில் 10,792 பேர் உள்ளனர்

2901 கிராம ஊராட்சித்தலைவர் பதவிகளில் 1 தலைவர் பதவிக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, மீதம் உள்ள 2900 பதவியிடங்களில் 2 இடங்களுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை மேலும் 119 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.மீதமுள்ள 2,779 பதவியிடங்களுக்கு 15, 964 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு அதில் 257 வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப் பட்டும் 4,796 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுள்ளனர் இறுதியாக 2779 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டிக் களத்தில் 10,792 வேட்பாளர்கள் உள்ளனர்.

19,705 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டிக்களத்தில் 61,750 வேட்பாளர்கள் உள்ளனர்.

22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு 21 வார்டுகளுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை மேலும் 2855 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மிதமுள்ள 19,705 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 72,399 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு அதில் தேர்தல் ஆணையத்தால் 634 வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டும். 7160 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுவுள்ளனர். இறுதியாக 19,705 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 61,750 வேட்பாளர்கள் போட்டிக் களத்தில் உள்ளனர்.

மொத்தமுள்ள 27003 பதவிகளுக்கு 1 பதவிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது போக 27,002 பதவிகளில் 23 பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை மேலும் போட்டியின்றி 2981 பதவிகளுக்கு போட்டின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 23,998 பதவிகளுக்கு 79,433 வேட்பாளர்கள் போட்டிக்களத்தில்உள்ளனர்.

இறுதியாக 23, 998 பதவியிடங்களுக்கு 98,151 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு அதில் 1166 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டும், 14,571 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றது மூலம் 79,433 வேட்பாளர்கள் போட்டிக்களத்தில் உள்ளனர்.   

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here