ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மக்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் துரிதமாக நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேட்டாப் வழங்கும் திட்டத்தில் ராமநாதபுரம் புனித ஆந்திரேயா மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்ட விழா நடந்தது.
விழாவில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற 9,939 மாணவ, மாணவியருக்கு ரூ.12 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், 2018 – 19 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 பயிலும் 9,018 மாணவ, மாணவியருக்கு ரூ.11 கோடியே 15 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பிலும், பிளஸ் 2 பயிலும் 9,532 மாணவ, மாணவியருக்கு ரூ.11 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலும் 18,550 மாணவ, மாணவியருக்கு ரூ.22 கோடியே 94 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 4,926 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மடி கணினிகளை தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.
பின் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது: தமிழக பள்ளி பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டது. தற்போது வரை 39 லட்சம் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பாலி டெக்னிக் மாணவ, மாணவியருக்கும் இலவச மடி கணினி விநியோக திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி நடப்பு கல்வி ஆண்டில் ராமேஸ்வரத்தில் உறுதியாக தொடங்கப்படும். கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.600 கோடி மதிப்பில் உவர் நீரை நன்னீராக்கும் திட்டத்தை சாயல்குடி அருகே குதிரை மொழி எனும் இடத்தில் அரசு நிறைவேற்ற உள்ளது. மணல் கொள்ளையர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, முதன்மை கல்வி அலுவலர் அய்யணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.