ராமநாதபுரம். ஜூலை,28 –முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் குழுமத்தின் சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்புக் மற்றும் மரககன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்தேசிய நண்பர்கள் மற்றும் நிக்கோலஸ் சார்பில் கலாம் அவர்களின் ஒவ்வொரு பிறந்த தினம் மற்றும் நினைவு தினங்களில் ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். சமுதாயத்தில் நல்ல அங்கத்தினராக ஒவ்வொருவரும் வர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஏழை எளிய மணவர்களுக்கு நோட் புக்கும், சமூதாய கண்ணோட்டம் மென் மேலும் வளர மரக்கன்றுகளையும் வழங்கினார்கள். மேலும் கலாம் அவர்கள் சொன்னது போல் அனைவரும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் 2020 க்குள் இந்தியா ஒரு வல்லரசு நாடாக உருவாக வேண்டும் நமது பிறப்பு சாதாரணமாக இருக்கலாம் ஆனால் இறப்பு என்பது ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற அவரது சொல்லிற் கிணங்க நாம் அனைவரும் அவர் வழியை பின்பற்றி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அவரின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் பஜார் போலீஸ் ஸ்டேஷன் காவல் ஆய்வாளர். தனபாலன் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நோட்டு புத்தகம் எழுது கோல் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். விழாவின் நிறைவில் ஸ்ரீராம் மெஸ் குரு நன்றி கூறினார். இதில் கலந்துக் கொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு அமைப்பின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கலாம் அய்யனார் செய்திருந்தார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் இராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச நோட்...