மீஞ்சூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
மீஞ்சூரில் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று நபர்களை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் பழிக்கு பழி தீர்க்க இளைஞர் கொடூரமாக கொலை.செய்ப்பட்டார உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் அவர் நண்பரிடம் முதற் கட்ட விசாரணையை தொடங்கிவுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கடை வீதியில் விடியற் காலையில் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டடு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பச்சை நிற துணியால் சுற்றப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வாசிகள் அளித்த தகவலை தொடர்ந்து, நிகழ்வு இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடத்தினர் அம் முதற் கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் மீஞ்சூரை அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அசின் (30) என்பதும், அவர் மீது குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும், மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய நபர்கள் சிலரை பாராட்டி இவர் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அசின் கொல்லப்பட்டாரா ? அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என்பது குறித்தும் மேலும் கொலை செய்யப்பட்ட அசினை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற அவரது நண்பன் அஜய் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




















