இராமநாதபுரம் இரயில்வே நிலையத்திற்கு தேவையான சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்தி தரும்படியான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தொகுதி மக்களின் தேவைகள் குறித்து அமைச்சரிடம் நேரடியாகச் சென்று வழியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார்.
இராமநாதபுரம்,ஜூலை,8-
இராமநாதபுரம் தொகுதி மக்களின் ரயில் போக்குவரத்து தேவைகளான இராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையங்கள் வழியாக செல்லக் கூடிய வண்டிகளை ராமநாதபுரம் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நிலையங்களில் நின்று செல்வது தொடர்பாகவும், தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்தி தேவையான வசதிகள் செய்து தருவது தொடர்பாகவும், ரயில் சேவைகளை அதிகப்படுத்துவது தொடர்பாகவும், ரயில் சேவைகளை புதுப்பிப்பது, நீட்டிப்பு செய்வது தொடர்பாகவும், புதிய ரயில் தடம் மற்றும் புதிய ரயில் சேவைகளை துவங்குவது, ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்து விரைவுவண்டிகளை நின்று செல்லும் வகையில் அமைப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.