ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை சார்பில் ரொக்கப்பரிசும் பாராட்டு விருதுகளும் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடந்தது.
இராமநாதபுரம் மாவட்டம் மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்வியில் சாதனை படைக்கும் மாணவ மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா ராமநாதபுரம் யாதர்வ திருமண மகாலில் நடைபெற்றது. இவ்விழாவில் 2018 – 19 கல்வி ஆண்டு பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இவ் விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் எம்.மூர்த்தி தலைமை வகித்தார். பொருளாளர் கே.மார்க்கண்டன் முன்னிலை வகித்தார். செயலாளர் எஸ்.முருகன் வரவேற்றார். பிளஸ் 2 தேர்வில் 600க்கு 500க்கும் மேல், பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 450க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த 20 மாணவியர், 15 மாணவர்களில் முதல் மூன்றிடம் பிடித்தவர்களுக்கு ரொக்கத் தொகை பரிசளிக்கப்பட்டது. இதர மாணவ, மாணவியருக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளாதார உதவி, பொருளாதாரத்தில் பின்தங்கிய யாதவ சமுதாய மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி தொகை வழங்கப்பட்டது. விழாவில் சட்ட ஆலோசகர் வக்கீல் அன்பு செழியன், எம்எஸ்ஆர்எல் மணி, சாத்தையா, பி.ஆர் பாண்டி,
ஏ.எம்.கதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பரிசளிப்பிற்கு நிதி வழங்கி உதவிய மாவீரன் அழகுமுத்துக் கோன் அறக்கட்டளை சவூதி, அமீரகம், பஹ்ரைன், குவைத், கத்தார், மஸ்கட் மற்றும் திருவாடானை கிளை நிர்வாகிகள், ஆட்டாங்குடி சா.மனோகரன், கொல்லங்குளம் வேலுச்சாமி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.