கும்பகோணம், மே. 15 –

கும்பகோணம் புறவழிச்சாலையில் சடைப்பெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளை இன்று ஆய்வு செய்தார். பின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ வ வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.

கும்பகோணம் புறவழி சாலையில் சாலையில்  விரிவாக்கப் பணிகளை மலையப்பநல்லூர் பகுதியில் ஆய்வு செய்த தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ வ வேலு சாலை ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தஞ்சை மாவட்டத்தில் 2716 கிலோமீட்டர் சாலையை தமிழக அரசு கட்டுமானம் விரிவாக்கம் தரம் உயர்த்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதாகவும்..

தமிழகத்தில்  போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும்  என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் கும்பகோணம் பட்டுக்கோட்டை திருவையாறு பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணிகள் தாமதமாக நடப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்த பணி மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது என்றும் இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தெரிவித்திருப்பதாகவும் ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசிய போது கடந்த ஆட்சியில் தண்ணீர் கிராவல் ஜல்லி போன்ற பொருட்கள் வழங்கப்படாமல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்றும் தற்போது வேண்டியதை வழங்கி வருவதாகவும் இதனால் தமிழகத்தில் சாலை பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த சாலை பணி விரைவில் முடிக்கப்படும் என்றும் தஞ்சை – கும்பகோணம் – மயிலாடுதுறை சாலை மிக மோசமாக பழுதடைந்து உள்ளது என்ற கேள்விக்கு  65 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது அனுமதி கிடைத்ததும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார்.

தொரடர்ந்து, சென்னை – கன்னியாகுமரி சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் திருவாரூர் – மயிலாடுதுறை 145 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்  தஞ்சை – மன்னார்குடி 16 கிலோ மீட்டருக்கு 116 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கும்பகோணம் – மன்னார்குடி சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகரிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு சாலைகள் பழுது பார்த்து நன்றாக இருக்கிறது வண்டியின் வேகம் அதிகமாக இருப்பதால் இயற்கையாகவே சாலை விபத்துக்கள் நடப்பதாகவும் இதனை குறைப்பதற்கு மாவட்டம்தோறும் பொதுமக்களுடன் ஒத்துழைப்போடு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி விபத்துகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here