திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை நிலை கண்காணிப்புக்குழுவினரால் ரூ.2.46 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், திருவண்ணமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர் ஆரணி, செய்யாறு வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் கடந்த 6ந் தேதி நடந்தது. தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களுக்கு ஒட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கடந்த 5ந் தேதி இரவு வரை பறக்கும் படை நிலை கண்காணிப்புக்குழு மூலம் தொடர்ந்து வாகன சோதனை நடந்தது. பறக்கும் படை நிலை கண்காணிப்புக்குழுவினர் மூலம் 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 46 லட்சத்து 43 ஆயிரத்து 45 மதிப்பில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 169 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு ரூ.1கோடியே 76 லட்சத்து 57 ஆயிரத்து 346 மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரால் ரூ.1.76 கோடி உரியவர்களிடம் ஒப்படைப்பு