சென்னை, செப் . 21 –

துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஈ.கே 542 விமானத்தில் வந்த 45 வயது ஆண் பயணி கடத்தி வந்த ரூ.27.8 லட்சம் மதிப்பிலான 583 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்து நடவடிக்கையை மேற் கொண்டனர்.

உளவுத்துறையினரிடம் இருந்து விமான நிலைய சுங்கத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற் கொண்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது..

சுங்கத்துறை அலுவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் அவரது உடலில் தங்கப்பசை அடங்கிய 4 பொட்டலங்கள் மறைத்து வைக்கப் பட்டிருந்தது. தெரிய வந்ததின் அடிப்படையில் சுங்கச் சட்டம் 1962-இன் கீழ்  அவர் கடத்தி வந்த  ரூ. 27.8 லட்சம் மதிப்பிலான 583 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்துள்ளனர்..மேலும் இந்த கடத்தல் சம்பந்தமாக விசாரணை நடைப்பெற்று வருவதாக சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here