திருவண்ணாமலை டிச.14-

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை உள்பட 12 வட்டங்களில் வருகிற 15, 17 ஆகிய 2 நாட்கள் முதலமைச்சரின் சிறப்பு பட்டா மாறுதல் தொடர்பான முகாம் நடைபெறவுள்ளது.

செய்யார் வட்டம் அனக்காவூரில் வரும் 15ந் தேதியும், பரதன்தாங்கல், பாப்பன்தாங்கல் ஆகிய கிராமங்களில் 17ந் தேதியும், கீழ்பென்னாத்தூர் வட்டம் கீக்களூர், செவரப்பூண்டி கிராமங்களில் 15ந் தேதியும், பன்னியூர், ஆங்குணம் ஆகிய கிராமங்களில் 17ந் தேதியும், திருவண்ணாமலை வட்டம் ஆடையூர், வேங்கிக்காலில் 15ந்தேதியும் அரடாப்பட்டில் 17ந் தேதியும், ஆரணி வட்டம் கண்ணமங்கலத்தில் 15ந் தேதியும் புத்தூரில் 17ந் தேதியும்,  சேத்துப்பட்டு வட்டம் கண்ணனூரில்15ந் தேதியும் பெரனம்பாக்கத்தில் 17ந் தேதியும்,  போளூர் வட்டம் பெரிய அகரத்தில் 15ந் தேதியும் அனந்தபுரத்தில்  17ந் தேதியும், தண்டராம்பட்டு வட்டம் பெருந்துறைப்பட்டு, எடக்கல் ஆகிய கிராமங்களில் 15ந் தேதியும் மலமஞ்சனூர், கொளமஞ்சனூர், ஒலகலபாடியில் 17ந் தேதியும், செங்கம் வட்டம் அரட்டவாடியில் 15ந் தேதியும், கெங்கப்பட்டில் 17ந் தேதியும், கலசபாக்கம் வட்டம் கடலாடியில் 15ந் தேதியும் கீழ்பாலூர் மேல்பாலூர் கிராமங்களில் 17ந் தேதியும், வெம்பாக்கம் வட்டம் தென்னம்பட்டில் 15ந் தேதியும் வாகை, அப்துல்லாபுரம் ஆகிய கிராமங்களில் 17ந் தேதியும் வந்தவாசி வட்டம் வெடாலில் 15ந் தேதியும், பாதிரி, சென்னவரம் கொடநல்லூர் சேதராகுப்பம் ஆகிய கிராங்களில் 17ந் தேதியும், ஜமுனாமரத்தூர் வட்டம் செண்பகத்தோப்பு, சீங்காடு, தும்பக்காடு, குட்டக்கரை ஆகிய கிராமங்களில் 15ந் தேதியும் பட்டறைக்காடு, மேல்சிப்பிலி ஆகிய கிராமங்களில் 17ந் தேதியும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் முதலமைச்சரின் சிறப்பு பட்டா மாற்றம் தொடர்பான முகாம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here