தஞ்சாவூர், பிப். 22 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையை அடுத்த பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 36 ஆவது ஆண்டு விழா பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி வீரமணி தலைமையில் நடைப்பெற்றது. அதில் உரை நிகழ்த்திய ஆசிரியர் கி.வீரமணி முன்னாள் மாணவர்கள் பொன் பொருள் கொடுத்து உதவுவதை விட மாணவர்களுக்கு உங்களின் அறிவாற்றலை வழங்குங்கள் என்றார்.

அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சி.எஸ்.ஐ.ஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி நடுவம் முதன்மை விஞ்ஞானி ஹேமலதா கலந்துக் கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் அந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவரும், மணியம்மை பல்கலைக் கழக வேந்தருமான கி வீரமணி உரை நிகழ்த்தும் போது இந்நிறுவனம் தனிப்பட்ட நிறுவனம் அல்ல, தந்தை பெரியார் என்ற பேராசான் எழுப்பிய த த்துவம் நிறைந்துள்ள பொற்கூடம் எனத் தெரிவித்தார்.

மேலும் முன்னாள் மாணவர்கள் பணத்தை வழங்குவதை விட அறிவுச் செல்வங்களை எங்களது மாணவர்களுக்கு வழங்குங்கள். என்றார். மேலும் இது மக்களுக்கான மக்கள் பல்கலைக்கழகம், தந்தை பெரியாரின் சேமிப்பில் இருந்து உருவானது, அந்நிலையிலே இப்பல்கலைக் கழகம் வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் சிறப்புடன் நடைப்பெற்ற அவ்விழாவில் மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பேராசிரியர்கள் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here