திருவண்ணாமலை அக்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று (06.10.2021) நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித் துறை, நீர்வள ஆதாரத் துறை, குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம், வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பள்ளிக் கல்வித் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, உட்பட அனைத்து துறை அலுவலர்களும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்கள், 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 860 கிராம ஊராட்சிகள் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 67 இடங்கள் மிதமான மற்றும் 8 இடங்கள் குறைந்த பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப் பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் கூடுதலாகவும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, குப்பநத்தம் அணை, மிருகண்டா அணை, செண்பகத்தோப்பு அணை என 4 நீர்தேக்கங்களும், பொதுப் பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் 697 பெரிய ஏரிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் 1253 சிறிய ஏரிகளும் உள்ளன.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மு.பிரதாப் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் திருமதி.பெ.சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், இணை இயக்குநர்கள், சுகாதார பணிகள் (திருவண்ணாமலை) மரு.செல்வகுமார் மற்றும் (செய்யாறு) மரு.பிரியா ராஜ் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.