புதுச்சேரி, ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் வீடு, வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
புதுச்சேரியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவுத்திரட்டும் வகையில் நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட நவீன கார்டன் பகுதியில் நெல்லித்தோப்பு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ரிச்சர்ட் (மகன்) மற்றும் காமராஜர் நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரான ஜான்குமார் (தந்தை) ஆகிய இருவரும் வீடு, வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.






















