
திருவள்ளூர், மே. 24 –
ஆவடி வட்டத்திற்குட்பட்ட மோரை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த தங்கமணி கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த அவரின் குடும்பத்திற்கு ரூ.20 இலட்சத்திற்கான காசோலையை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
தொடர்ந்து நடைப்பெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் ( பொ ) எஸ்.கோவிந்தராஜன் 269 கோரிக்கை மனுக்களை பெற்றார். அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைப் புரிந்த பொதுமக்கள் தனிப்பட்ட மற்றும் பொதுப் பிரச்சினைகள் குறித்து உதவிகள் வழங்கிட வேண்டி மனுக்கள் அளித்தனர். அவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்களில் நிலம் சம்பந்தமாக 62 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56 மனுக்களும், வேலைவாய்ப்பு சம்பந்தமாக 36 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 39 மனுக்களும் மற்றும் இதற துறைகள் சம்பந்தமாக 76 மனுக்கள் என மொத்தம் 269 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.

மேலும் திருவள்ளூர் வட்டம் அம்மணம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி சரளா என்பவர் பாம்பு கடித்து இறந்த்தை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி தொகுப்பில் இருந்து ரூ1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரன் நேர்முக உதவியாளர் பொது சி.வித்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின் நல அலுவலர் பி.ப.மதுதணன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.





















