சென்னை, அக். 7-
தமிழ்நாடு சிறைப்பணிக்கான சிறை அலுவலர் பதவிக்கு தேர்வெழுதியவர்களில் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியலை தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வாணைய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்து.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் 1 காலியிடத்திற்கான சிறைப்பணிக்கான சிறை அலுவலர் பதவிக்கு கடந்த டிச-22-2019 ஆம் ஆண்டு இதற்கான தேர்வு நடைப்பெற்றது. இத் தேர்வில் 548 பேர்கள் கலந்துக் கொண்டு தேர்வெழுதினர். இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடவொதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in – ல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான நேர்காணல் வரும் அக்.27-2021 ஆம் தேதி முற்பகல் நடைப்பெறும் என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.