தஞ்சாவூர், மார்ச். 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள R.K நர்சரி கர்டனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கன்றுகள் தீயில் கருகி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

தஞ்சை சடையார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஆர்கே நர்சரி கார்டன் என்ற பெயரில் மரக்கன்றுகள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை நர்சரி கார்டனில் திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. அதனால் கடை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அதில் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த  விலை உயர்ந்த மரக்கன்றுகள் முற்றிலுமாக எரிந்து கருகியதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும் அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை வெகு நேரம் போராடி கட்டுப்படுத்தினர்.

மேலும் அச்சம்ம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற் கொண்ட முதற்கட்ட விசாரணையில் நர்சரி கார்டன் அடுத்த காலி மனையில் நிறுத்தி வைத்து இருந்த பழம் விற்பனை செய்யும் தள்ளுவண்டியில் இருந்து தீ பரவியதாக தெரியவந்துள்ளதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவ்விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கன்றுகள் தீயில் கருகி சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது மேலும் தொடர்ந்து நடைப்பெற்று வரும் காவல்துறையினரின் முழு விசாரணைக்கு பின்பே தெளிவான பாதிப்பு குறித்த விவரம் தெரிய வரும் எனவும் தகவல் தெரிவிக்கிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here