மீஞ்சூர், ஜூலை. 09 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் பகுதியில் அமைந்திருக்கும் மிக பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை 9.மணி அளவில் நடைபெற்றது.

இவ்விழாவினை முன்னிட்டு, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கடம் புறப்பாடு நடைப்பெற்றது. தொடர்ந்து, விமான கோபுரம் மற்றும் கருடபகவான், கிராம தேவதைகள் உள்ளிட்ட காவல் தெய்வங்களுக்கு சிவச்சாரியர்கள் ஓத தீபாராதனை நடைப்பெற்றது.

மேலும் பல்வேறு நதிகளியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் நிரப்பட்ட கடங்கள் நான்கு கால யாக பூஜைகளில் பூஜிக்கப்பட்ட அப்புனித நீர் விமான கலங்களில் அபிஷேகம் செய்விக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்களின் பக்தி குரலோசையுடன் இனிதே நடைப்பெற்றது.

தொடர்ந்து பக்தர்களின் மீது கும்பகலச புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக இவ்விழா 15ஆவது வார்டு கவுன்சிலர் பரிமளா அருண்குமார் தலைமையிலும், மற்றும் வள்ளுவர் நகர் சமூக நல சங்கத்தின் தலைவர் கண்ணன், செயலாளர் முருகன், பொருளாளர் தேவராஜ், துணைத் தலைவர்கள் சத்தியசீலன், ராஜேஷ், துணை செயலாளர் சத்யராஜ், சீதா, ஆலோசகர்கள் வரதராஜன் ,ஷியாம் ,முத்துகிருஷ்ணன், நடராஜன், விஜயன், குமார், மோசஸ் நடேசகுமார், சட்ட ஆலோசகர் சதீஷ்குமார் ,உள்ளிட்டவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன் ராஜா,பலராமன், ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி,மீஞ்சூர் திமுக நகரக் கழக செயலாளர் தமிழ் உதயன், வார்டு உறுப்பினர்கள் துரைவேல் பாண்டியன், சங்கீதா சேகர், கவிதா ஷங்கர், குமாரி புகழேந்தி, ஜெயலட்சுமி ஜெயசங்கர், பாஸ்கர், தன்ராஜ், ராஜன், நக்கீரன், ராஜேஷ் ,உள்ளிட்டவர்களும் ,மேலூர் ராஜ்குமார், அண்ணாச்சி சுந்தரராஜன் ,கலைவாணி, விச்சூர் தமிழரசன, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், இதில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here