கூடுவாஞ்சேரி, ஏப். 02 –

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். பொதுப்பள்ளியில் தொடக்கக்கல்விக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்புடன் இப்பள்ளி இணைந்து  ஆரம்பகால குழந்தைப் பருவத்திற்கான கல்வி மற்றும் மேம்பாடு குறித்த சர்வதேச மாநாடு நடைப்பெற்றது.

மேலும் இம்மாநாட்டில் அண்டைநாடான இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு , பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து கல்வியாளர்கள் பலர் வருகை தந்து இம்மாநாட்டில்  கலந்து கொண்டனர்.

மேலும், இதில் முக்கியமாக தெற்காசிய நாடுகளின் கலாச்சாரம், கல்விமுறை, தொடர்பான விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை ஆரம்ப கால குழந்தை  பருவத்திற்கான கல்வி மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் டாக்டர். கே.ஆர். மாலதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

மேலும் அவர் தொடர்ந்து உரைநிகழ்த்தும் போது, இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கல்வியை முழுமையாக்க மாணவர்களுக்கு உதவுவது தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை அப்போது அவர் எடுத்துரைத்தார்.

மேலும் அவரைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக  தெற்காசிய ஆரம்ப கால குழந்தை  பருவத்திற்கான கல்வி மற்றும் மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் ஜனக கமல்கோடா பங்கேற்று பேசினார்.

அவரது உரையின்  போது, பள்ளிசெல்லும்  குழந்தைகள்  இடைநிற்றல் இல்லாமல் கற்பதற்கான வாய்ப்பு மற்றும் கற்றல் மேம்பாடு பற்றி எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் துணை ஆணையர் வனிதா ஐ.பி.எஸ். பேசிய போது, குற்ற நிகழ்விலிருந்து குழந்தைகள் தற்காத்து கொள்வது தொடர்பாக எடுத்துரைத்தார். உலகளாவிய கல்வி முறையை பற்றி விவாதிப்பது, அதனை மேம்படுத்தி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கற்பிப்பது  இம்மாநாட்டின் நல்ல  நோக்கமாக இருப்பதாக அப்போது அவர் வெகுவாக பாராட்டினார்.

மேலும், குழந்தைகளின் கற்றல் மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட இந்த சர்வதேச மாநாட்டில் பங்களாதேஷ், மாலத்தீவு, இலங்கை, பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்த   கல்வியாளர்கள், குழந்தைகளின் திறன் மேம்பாடு , ஆசிரியர் மற்றும் பெற்றோரின் பங்கு தொடர்பாக செய்முறை விளக்கம் கொடுத்தது அனைவரையும் கவர்ந்தது.

மேலும், இம்மாநாட்டில் , எஸ்.ஆர்.எம். பொதுப்பள்ளி இயக்குனர் மணிமங்கை சத்யநாராயணன், தாளாளர் எம். சுப்பிரமணியன், பள்ளி முதல்வர் எஸ்.புவனேஷ்வரி  உட்பட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள்,  தாளாளர்கள் , வழக்கறிஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர்  இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், இம்மாநாட்டில் எஸ்.ஆர்.எம். பொதுப்பள்ளி மாணவர்களின் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறியது அனைவரையும் கவர்ந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here